Sep 12, 2026
Thisaigal NewsYouTube
தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது
தற்போதைய செய்திகள்

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது

Share:

தாய்லாந்து நாட்டின் ஹுவா ஹின் பகுதியில் 166 கிலோ ஷாபு போதைப்பொருளை அந்நாட்டு போலீசார் பறிமுதல் செய்ததுடன், 20 வயதுடைய மலேசிய இளைஞர் ஒருவரையும் கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மொத்த மதிப்பு 8 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த கைது நடவடிக்கையின் போது, பேங்காங்-லிருந்து தெற்கு தாய்லாந்து-க்கு போதைப்பொருள் கடத்திச் செல்லப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், வெள்ளை நிற பி.எம்.டபுள்.யு காரை போலீசார் கண்காணித்தனர்.

ஹுவா ஹின் சோதனைச் சாவடியில், போலீசாரிடமிருந்து தப்பிக்க முயன்ற அந்த பி.எம்.டபுள்.யு காரை துரத்திச் சென்று மடக்கிய பின்னர், அதிலிருந்த பயணப் பெட்டிகளில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக தாய்லாந்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related News

இந்தோனேசியாவில் இணைய மோசடியில் 30 மலேசியர்கள் ஈடுபட்டது எப்படி? குற்றப் பின்னணியை ஆராய்கிறது மலேசியா

இந்தோனேசியாவில் இணைய மோசடியில் 30 மலேசியர்கள் ஈடுபட்டது எப்படி? குற்றப் பின்னணியை ஆராய்கிறது மலேசியா

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து அவசியம்: ஈரான் அதிபரிடம் அன்வார் வலியுறுத்து

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து அவசியம்: ஈரான் அதிபரிடம் அன்வார் வலியுறுத்து

சிரம்பானில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்தது: 3 கார்கள் மண்ணில் புதைந்தன

சிரம்பானில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்தது: 3 கார்கள் மண்ணில் புதைந்தன

மலேசியத் தேர்தல் தலையீட்டிற்கு கிளவுட் ஏஐ பயன்படுத்தப்பட்டதா? – எம்சிஎம்சி விசாரணை

மலேசியத் தேர்தல் தலையீட்டிற்கு கிளவுட் ஏஐ பயன்படுத்தப்பட்டதா? – எம்சிஎம்சி விசாரணை

நேபாள பேரிடர்: நாளை நாடு திரும்புகிறது மலேசியாவின் ஸ்மார்ட் குழு

நேபாள பேரிடர்: நாளை நாடு திரும்புகிறது மலேசியாவின் ஸ்மார்ட் குழு

பீட்டர் ஆண்டனி விடுதலை விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு இல்லை - மலேசிய சிறைத்துறை விளக்கம்

பீட்டர் ஆண்டனி விடுதலை விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு இல்லை - மலேசிய சிறைத்துறை விளக்கம்