Sep 12, 2026
Thisaigal NewsYouTube
போர்ட்டிக்சனில் துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சியில் சக வீரர் சுட்டதில் ராணுவ வீரர் காயம்
தற்போதைய செய்திகள்

போர்ட்டிக்சனில் துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சியில் சக வீரர் சுட்டதில் ராணுவ வீரர் காயம்

Share:

நேற்று போர்ட்டிக்சன், சுங்கை மென்யாலா பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சியின் போது சக வீரர் தவறுதலாக சுட்டதில் 20 வயதுடைய ராணுவ வீரர் முகத்தில் காயமடைந்தார்.

இது குறித்து நெகிரி செம்பிலான் மாநில துணை போலீஸ் தலைவர் நஷாருடின் ஷரீஃப் கூறுகையில், நேற்று பிற்பகல் சுமார் 2.15 மணியளவில், பாதிக்கப்பட்ட வீரரும், மேலும் சில வீரர்களும் துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இந்தச் சம்பவம் நிழ்ந்ததாகத் தெரிவித்துள்ளார்.

காயமடைந்த வீரர் முதலில் போர்ட்டிக்சன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக துவாங்கு ஜாஃபார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக, சம்பந்தப்பட்ட இராணுவ வீரர், ஆயுத சட்டம்1960, பிரிவு 37 மற்றும் குற்றவியல் சட்டம் பிரிவு 337 ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related News

இந்தோனேசியாவில் இணைய மோசடியில் 30 மலேசியர்கள் ஈடுபட்டது எப்படி? குற்றப் பின்னணியை ஆராய்கிறது மலேசியா

இந்தோனேசியாவில் இணைய மோசடியில் 30 மலேசியர்கள் ஈடுபட்டது எப்படி? குற்றப் பின்னணியை ஆராய்கிறது மலேசியா

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து அவசியம்: ஈரான் அதிபரிடம் அன்வார் வலியுறுத்து

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து அவசியம்: ஈரான் அதிபரிடம் அன்வார் வலியுறுத்து

சிரம்பானில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்தது: 3 கார்கள் மண்ணில் புதைந்தன

சிரம்பானில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்தது: 3 கார்கள் மண்ணில் புதைந்தன

மலேசியத் தேர்தல் தலையீட்டிற்கு கிளவுட் ஏஐ பயன்படுத்தப்பட்டதா? – எம்சிஎம்சி விசாரணை

மலேசியத் தேர்தல் தலையீட்டிற்கு கிளவுட் ஏஐ பயன்படுத்தப்பட்டதா? – எம்சிஎம்சி விசாரணை

நேபாள பேரிடர்: நாளை நாடு திரும்புகிறது மலேசியாவின் ஸ்மார்ட் குழு

நேபாள பேரிடர்: நாளை நாடு திரும்புகிறது மலேசியாவின் ஸ்மார்ட் குழு

பீட்டர் ஆண்டனி விடுதலை விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு இல்லை - மலேசிய சிறைத்துறை விளக்கம்

பீட்டர் ஆண்டனி விடுதலை விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு இல்லை - மலேசிய சிறைத்துறை விளக்கம்