Sep 15, 2026
Thisaigal NewsYouTube
அன்வார் அடுத்த வாரம் புருணை சுல்தானை சந்திக்கிறார்
தற்போதைய செய்திகள்

அன்வார் அடுத்த வாரம் புருணை சுல்தானை சந்திக்கிறார்

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மலேசியா–புருணை இடையிலான 27ஆவது ஆண்டு தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்காக அடுத்த வாரம் பண்டார் ஸ்ரீ பெகாவானில், புருணை சுல்தான், சுல்தான் ஹசனல் போல்கியா- யாவைச் சந்திக்கவுள்ளார். சுல்தான் தம்மை தொலைபேசியில் தொடர்புகொண்டு உடல்நலம் குறித்து கேட்டறிந்ததுடன், தமக்காகப் பிரார்த்தனை செய்ததாக அன்வார் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

மலேசியா மற்றும் புருணை இடையிலான உயர்மட்ட இருதரப்பு ஆலோசனை அமைப்பாக இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மறுஆய்வு செய்வதுடன், பிராந்திய மற்றும் அனைத்துலக விவகாரங்கள் குறித்தும் தலைவர்கள் கலந்துரையாட உள்ளனர். இதனிடையே, வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட குடலிறக்கத்திற்காக அன்வாருக்கு நேற்று முன்தினம் சிறிய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவர் தொடர்ந்து இரண்டு நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

ஈப்போவில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் மீது 2 குற்றச்சாட்டுகள்

ஈப்போவில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் மீது 2 குற்றச்சாட்டுகள்