தேசிய தினம் மற்றும் மலேசிய தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, மலேசியர்கள் 10ஜிபி இலவச இணையத் தரவை பெறவுள்ளனர்.
ஆகஸ்ட் 31ஆம் தேதி தேசிய தினத்தன்று 5ஜிபி-யும், செப்டம்பர் 16ஆம் தேதி மலேசிய தினத்தன்று மேலும் 5ஜிபி-யும் வழங்கப்படும் என தொடர்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்ஹில் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தில் செல்கொம் டீஜி,மெக்சிஸ், டி.எம், யு மொபைல், மற்றும் யெஸ் ஆகிய ஐந்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அரசாங்கத்துடன் இணைந்துள்ளன.
முன்பணம் மற்றும் பிற்கட்டண சேவைகளைப் பயன்படுத்தும் அனைத்து மலேசியக் குடிமக்களும் இந்த இலவச இணையத் தரவைப் பெறுவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.








