Sep 12, 2026
Thisaigal NewsYouTube
டான்ஸ்ரீ கேவியஸ் வழக்கு தள்ளுபடி: மைபிபிபி தலைவராக மெக்லின் அங்கீகாரம் உறுதி
தற்போதைய செய்திகள்

டான்ஸ்ரீ கேவியஸ் வழக்கு தள்ளுபடி: மைபிபிபி தலைவராக மெக்லின் அங்கீகாரம் உறுதி

Share:

மைபிபிபி கட்சித் தலைவராக டத்தோ ஸ்ரீ மேக்லின் டெனிஸ் டி குரூஸ் அங்கீகரிக்கப்பட்டதை எதிர்த்து அக்கட்சியின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ எம். கேவியஸ் தொடுத்த வழக்கை புத்ராஜெயா, மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று ஒருமனதாகத் தள்ளுபடி செய்தது. மூவர் கொண்ட நீதிபதிகள் குழு, நீதித்துறை மறுஆய்வைத் தொடங்க டான்ஸ்ரீ கேவியஸுக்கு அனுமதி மறுத்ததுடன் உயர் நீதிமன்றத் தீர்ப்பையும் உறுதி செய்தது.

டான்ஸ்ரீ கேவியஸ் தற்போது மைபிபிபி உறுப்பினர் இல்லை என்றும், தீர்வு காணப்படாத திவால் நிலையில் இருப்பதால் கட்சிப் பதவியை வகிக்க அவருக்கு உரிமை இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், கட்சியின் உள்விவகாரங்கள் தொடர்பான சர்ச்சைகளை நீதிமன்றத்தில் சவால் செய்ய முடியாது என சங்கங்களின் சட்டத்தின் 18சி பிரிவை சுட்டிக்காட்டியது. 2023ஆம் ஆண்டு மெக்லின், கட்சித் தலைவராக அங்கீகரிக்கப்பட்டதை எதிர்த்து டான்ஸ்ரீ கேவியஸ் தொடர்ந்த வழக்கே தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்வது குறித்து டான்ஸ்ரீ கேவியஸின் அறிவுறுத்தலுக்காக காத்திருப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Related News

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்