Sep 12, 2026
Thisaigal NewsYouTube
கெடாவில் குடிநுழைவுத் துறை அதிரடி: 94 சட்டவிரோத குடியேறிகள் கைது
தற்போதைய செய்திகள்

கெடாவில் குடிநுழைவுத் துறை அதிரடி: 94 சட்டவிரோத குடியேறிகள் கைது

Share:

கெடா குடிநுழைவுத் துறை மேற்கொண்ட ‘ஆப்ஸ் மாஹிர்’ மற்றும் ‘ஆப்ஸ் சாபு’ சோதனை நடவடிக்கைகளில் 94 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் கோலா மூடா, குபாங் பாசு, லங்காவி உள்ளிட்ட பகுதிகளில் 22 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 227 பேரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், 41 குடிநுழைவுத் துறை அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 84 ஆண்கள், 10 பெண்கள் அடங்குவர். அவர்களில் 45 பேர் வங்காளதேசப் பிரஜைகள், 26 பேர் மியான்மர் நாட்டினர், 18 பேர் இந்தோனேசியர்கள் மற்றும் 5 பேர் பாகிஸ்தானியர்கள். கட்டுமானத் தளங்கள், தொழிலாளர் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் வீடுகளில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. 18 முதல் 59 வயதுடைய இவர்களிடம் குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related News

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்