Sep 15, 2026
Thisaigal NewsYouTube
போலீசாரைக் கண்டதும் நீதிமன்றத்திலிருந்து இருவர் தப்பியோட்டம்
தற்போதைய செய்திகள்

போலீசாரைக் கண்டதும் நீதிமன்றத்திலிருந்து இருவர் தப்பியோட்டம்

Share:

ஆயுதத்தால் காயம் ஏற்படுத்தியதாகவும், அரசு ஊழியர் மீது குற்றவியல் வலுவைப் பயன்படுத்தியதாகவும் கூலிம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் நீதிமன்றத்திலிருந்து தப்பியோடியுள்ளனர்.

27 மற்றும் 30 வயதுடைய அந்த இருவரும் ஏப்ரல் 30ஆம் தேதி குற்றவியல் சட்டத்தின் 324 மற்றும் 353 ஆவது பிரிவுகளின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு, மொத்தம் 7,000 ரிங்கிட் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இன்று வழக்கு விசாரணைக்கான ஆவணங்கள் மற்றும் வழக்கு நிர்வாகம் தொடர்பான விசாரணைக்கு இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர். பின்னர், நீதிமன்றத்தின் முன்புறத்தில் போலீசார் காத்திருப்பதைக் கண்டதும், பின்புற வழியாக வெளியேறியுள்ளனர்.

அவர்களில் ஒருவர் முதல் மாடியிலிருந்து தூணில் இறங்கி தப்பியோடியதுடன், மற்றொருவர் நீதிமன்றத்துக்குள் மீண்டும் சென்று பின்புறப் பாதை வழியாக தப்பியுள்ளார்.

இருவரும் வேலியைத் தாண்டி தப்பிச் சென்றதாக கூலிம் போலீஸ் தலைவர் ஷாம்சூல் சின்ரிங் தெரிவித்தார். அவர்கள் ஏன் கைது செய்யப்படவிருந்தனர் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை

Related News