Sep 7, 2026
Thisaigal NewsYouTube
உயர்கல்விக்கூட மாணவர் முதியவரைக் கொன்றதாக குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

உயர்கல்விக்கூட மாணவர் முதியவரைக் கொன்றதாக குற்றச்சாட்டு

Share:

மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்ட 23 வயது உயர்கல்வி மாணவர் ந. விஷ்வேஷ், 78 வயது முதியவரைக் கொலை செய்ததாக இன்று பந்திங், தெலுக் டத்தோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி இரவு 7.20 மணியளவில், கோலா லங்காட் பகுதியில் உள்ள கிள்ளான்–பந்திங்–போர்ட்டிக்சன் சாலையின் 38ஆவது கிலோமீட்டரில், எங் கிம் கெங் என்ற 78 வயது நபரை வாகனத்தினால் மோதி தள்ளி கொன்றதாக அந்த உயர் கல்விக்கூட மாணவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, அந்த மாணவர் குற்றச்சாட்டின் தன்மையை புரிந்து கொண்டதற்கு அடையாளமாக தலையசைத்தார். இக்கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்குள் வருவதால், அவரிடம் எந்தவொரு வாக்குமூலமும் ல் பதிவு செய்யப்படவில்லை. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், குற்றவியல் சட்டம் 302ஆவது பிரிவின் கீழ் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து