பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பெர்சத்து கட்சிக்கு இடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துவது குறித்து, பக்காத்தான் ஹராப்பான் அல்லது பிகேஆர் தலைமைத்துவக் கூட்டங்களில் இதுவரை எந்த விவாதமும் நடைபெறவில்லை என பக்காத்தான் ஹராப்பான் தொடர்பு இயக்குநர் டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.
இன்று புத்ரஜெயாவில் நடைபெற்ற தேசிய தினம் மற்றும் மலேசிய தினக் கொண்டாட்டங்களுக்கான நன்கொடை நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டத்தோஸ்ரீ ஃபஹ்மி , பெர்சத்துவுடன் ஒத்துழைப்பது தொடர்பான எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றார்.
அரசியல் நிலைத்தன்மையை கருத்தில் கொண்டு பெர்சத்துவுடன் அல்லது தேசிய கூட்டணியுடன் ஒத்துழைப்பதற்கான வாய்ப்பை பக்காத்தான் ஹராப்பான் நிராகரிக்கவில்லை என பிகேஆர். கட்சியின் உதவித் தலைவரும், சிலாங்கூர் மாநில மந்திரி பெசராருமான டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி பேசியிருப்பது தொடர்பில் டத்தோஸ்ரீ ஃபாஹ்மியிடம் கருத்து கேட்ட போது அவர் மேற்கண்டவாறு பதில் அளித்தார்.








