Sep 12, 2026
Thisaigal NewsYouTube
100 வயதை கடந்து ஆசியான் சாதனை படைத்த துன் மகாதீர், ஹாஸ்மா தம்பதி
தற்போதைய செய்திகள்

100 வயதை கடந்து ஆசியான் சாதனை படைத்த துன் மகாதீர், ஹாஸ்மா தம்பதி

Share:

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மஹாதீர் முகமது , அவரது மனைவி டாக்டர் சித்தி ஹாஸ்மா ஆகியோர் தங்களின் நீண்ட ஆயுள் மற்றும் சேவைகளுக்காக மூன்று சாதனைகளைப் படைத்து வரலாறு படைத்துள்ளனர்.

நேற்று பெர்டானா தலைமைத்துவ அறக்கட்டளையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஆசியான் வட்டாரத்தில் வாழ்ந்து வரும் வயது முதிர்ந்த முன்னாள் பிரதமராக மஹாதீரையும், வயது முதிர்ந்த முன்னாள் பிரதமரின் மனைவியாக ஹஸ்மாவையும் ஆசியான் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்தது.

மேலும், மகாதீர் முன்னாள் அரசாங்கத் தலைவர் என்ற முறையில் அவரும் அவரது மனைவி இருவரும் 100 வயதை எட்டிய முதல் தம்பதி என்ற சாதனையையும் ஆசியான் ரெக்கார்ட்ஸ் இணைந்து வழங்கியது.

இச்சாதனைகள், கடந்த ஜூலை மாதம் மஹாதீர்-இன் 101ஆவது பிறந்தநாள், சித்தி ஹாஸ்மா-வின் 100-ஆவது பிறந்தநாள், அதன் தொடர்ச்சியாக கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி அவர்களின் 70-ஆவது திருமண ஆண்டு ஆகிய முக்கிய நிகழ்ச்சிகளை முன்னிட்டு வழங்கப்பட்டுள்ளன.

ஆசியான் ரெக்கார்ட்ஸ் ஆலோசனைக் குழுத் தலைவர் டேனி ஓய், தலைமை மதிப்பீட்டாளர்களான கிலியன் ஓய் மற்றும் எல்ட்ரிக் கோ ஆகியோருடன் இணைந்து இந்தச் சாதனைச் சான்றுகளை வழங்கினார்.

Related News

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி