Sep 12, 2026
Thisaigal NewsYouTube
பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

Share:

பிகேஆர் கட்சியின் 2026-ஆம் ஆண்டிற்கான தேசிய மாநாடு நாளை மலாக்கா அனைத்துலக வர்த்தக மையத்தில் தொடங்குகிறது.

இதில் 2,500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளும் 3,000 -த்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை நடைபெறும் பி.கே.ஆர் கட்சியின் இளைஞர் பிரிவு மற்றும் மகளிர் பிகேஆர் ஆகியவற்றின் இணைந்த கூட்டத்தை பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் நூருல் இஸா அன்வார் தொடங்கி வைக்கிறார்.

அதேவேளையில், வரும் சனிக்கிழமை நடைபெறும் மாநாட்டின் அதிகாரப்பூர்வ தொடக்க விழாவில், பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவரும், பிரதமருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹீம் கொள்கை உரையாற்றவுள்ளார்.

இதனிடையே, இம்மாநாட்டில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளும், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

“சீர்திருத்தத்தைப் புதுப்பித்து, நாகரிகமான சமூகத்தை உருவாக்குவோம்” என்ற கருப்பொருளில் நடைபெறும் இம்மாநாட்டில் பொருளாதாரம், கல்வி மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன.

கட்சியின் பல்வேறு பிரிவுகள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த 16 பிரதிநிதிகள், அன்வாரின் கொள்கை உரை குறித்து விவாதிக்க உள்ளனர்.

மாநாட்டின் ஒரு பகுதியாக, கட்சிக்காக இறுதிவரை சேவையாற்றிய உறுப்பினர்களின் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், ஐந்து குடும்பங்களுக்கு விருதுகளும் வழங்கப்படவுள்ளன.

வரும் ஞாயிற்றுக்கிழமை விவாதங்களை முடித்து இம்மாநாட்டை அன்வார் அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்யவுள்ளார்.

Related News

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்

இந்தோனேசியாவில் இணைய மோசடியில் 30 மலேசியர்கள் ஈடுபட்டது எப்படி? குற்றப் பின்னணியை ஆராய்கிறது மலேசியா

இந்தோனேசியாவில் இணைய மோசடியில் 30 மலேசியர்கள் ஈடுபட்டது எப்படி? குற்றப் பின்னணியை ஆராய்கிறது மலேசியா

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து அவசியம்: ஈரான் அதிபரிடம் அன்வார் வலியுறுத்து

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து அவசியம்: ஈரான் அதிபரிடம் அன்வார் வலியுறுத்து

சிரம்பானில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்தது: 3 கார்கள் மண்ணில் புதைந்தன

சிரம்பானில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்தது: 3 கார்கள் மண்ணில் புதைந்தன

மலேசியத் தேர்தல் தலையீட்டிற்கு கிளவுட் ஏஐ பயன்படுத்தப்பட்டதா? – எம்சிஎம்சி விசாரணை

மலேசியத் தேர்தல் தலையீட்டிற்கு கிளவுட் ஏஐ பயன்படுத்தப்பட்டதா? – எம்சிஎம்சி விசாரணை