Sep 12, 2026
Thisaigal NewsYouTube
சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய அனிமேஷன் முயற்சி
தற்போதைய செய்திகள்

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய அனிமேஷன் முயற்சி

Share:

புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற போக்குவரத்து அமைச்சின் தேசிய தின மாதாந்திரக் கூட்டத்தில், சாலைப் பாதுகாப்பு தொடர்பான புதிய முயற்சி ஒன்றை சாலைப் போக்குவரத்துத் துறையான ஜே.பி.ஜே அறிமுகப்படுத்தியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சியூ ஃபூக் தெரிவித்தார்.

அனிமேஷன் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து, சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பல்வேறு அனிமேஷன் படைப்புகளை ஜே.பி.ஜே தயாரிக்கவுள்ளதாக அவர் கூறினார்.

குறிப்பாக, பள்ளிப் பருவத்திலிருந்தே குழந்தைகளிடையே சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இம்முயற்சியின் முக்கிய நோக்கமாகும் என்று அந்தோணி லோக் விவரித்தாரதெரிவித்தார்.

குழந்தைகள் சாலை விதிகளைப் பின்பற்றுவது தொடர்பாக தங்களது பெற்றோருக்கு அறிவுறுத்துவதன் மூலம், பெற்றோரின் வாகனம் செலுத்தும் பழக்கத்திலும் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என அவர் கூறினார்.

சாலைப் பாதுகாப்பு செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு ஆக்கப்பூர்வமான மற்றும் புதுமையான அணுகுமுறைகள் அவசியம் எனக் குறிப்பிட்ட லோக், ஜே.பி.ஜே-யின் இந்த முயற்சியை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் போக்குவரத்து அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ ஜனா சந்திரன் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related News

இந்தோனேசியாவில் இணைய மோசடியில் 30 மலேசியர்கள் ஈடுபட்டது எப்படி? குற்றப் பின்னணியை ஆராய்கிறது மலேசியா

இந்தோனேசியாவில் இணைய மோசடியில் 30 மலேசியர்கள் ஈடுபட்டது எப்படி? குற்றப் பின்னணியை ஆராய்கிறது மலேசியா

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து அவசியம்: ஈரான் அதிபரிடம் அன்வார் வலியுறுத்து

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து அவசியம்: ஈரான் அதிபரிடம் அன்வார் வலியுறுத்து

சிரம்பானில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்தது: 3 கார்கள் மண்ணில் புதைந்தன

சிரம்பானில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்தது: 3 கார்கள் மண்ணில் புதைந்தன

மலேசியத் தேர்தல் தலையீட்டிற்கு கிளவுட் ஏஐ பயன்படுத்தப்பட்டதா? – எம்சிஎம்சி விசாரணை

மலேசியத் தேர்தல் தலையீட்டிற்கு கிளவுட் ஏஐ பயன்படுத்தப்பட்டதா? – எம்சிஎம்சி விசாரணை

நேபாள பேரிடர்: நாளை நாடு திரும்புகிறது மலேசியாவின் ஸ்மார்ட் குழு

நேபாள பேரிடர்: நாளை நாடு திரும்புகிறது மலேசியாவின் ஸ்மார்ட் குழு

பீட்டர் ஆண்டனி விடுதலை விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு இல்லை - மலேசிய சிறைத்துறை விளக்கம்

பீட்டர் ஆண்டனி விடுதலை விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு இல்லை - மலேசிய சிறைத்துறை விளக்கம்