Sep 7, 2026
Thisaigal NewsYouTube
கோம்பாக் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் பயணி  விழுந்தார்
தற்போதைய செய்திகள்

கோம்பாக் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் பயணி விழுந்தார்

Share:

கோம்பாக் எல்ஆர்டி நிலையத்தில் இன்று காலை பயணி ஒருவர் மயக்கமடைந்து தண்டவாளத்தில் விழுந்ததாக ரேபிட் கேஎல் தெரிவித்துள்ளது.

காலை 9.05 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாகவும், உடனடியாக பாதுகாப்பு கருதி எனப்படும் அவசர நிறுத்து அமைப்பு செயல்படுத்தப்பட்டு, தண்டவாளத்துக்கான மின்சாரம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டதாகவும் கூறியது.

தண்டவாளத்தில் விழுந்த பயணி பாதுகாப்பாக மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் வரும் வரை அவசர அறையில் வைக்கப்பட்டார். பின்னர், மேலதிக பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக கோலாலம்பூர் தாவாக்கல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதனிடையே, தண்டவாளம் பாதுகாப்பான நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ரயில் சேவை காலை 9.12 மணிக்கு மீண்டும் தொடங்கப்பட்டது என்று ரேபிட் கே.எல். தெரிவித்தது.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து