Sep 12, 2026
Thisaigal NewsYouTube
மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு
தற்போதைய செய்திகள்

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

Share:

இன்று காலை 9 மணி நிலவரப்படி, நாடெங்கிலும் 11 இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சரவாக் மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய காற்று மாசுக் குறியீட்டு மேலாண்மை அமைப்பான எ.பி.ஐ.எம்.எஸ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

சரவாக் மாநிலத்தில் அதிகபட்ச காற்று மாசுக் குறியீடான ஏ.பி.ஐ சமரஹான்-ல் 183 ஆகப் பதிவானது.

அதனைத் தொடர்ந்து செரியான் – 182, கூச்சிங் – 176, சரிக்கே மற்றும் ஸ்ரீ அமான் – 158, முக்கா மற்றும் சிபு – 152 எனப் பதிவாகியுள்ளது.

இதனிடையே, தீபகற்ப மலேசியாவில் ஜோஹான் செடியாவில் 154, கோலாலம்பூரில் 131, புத்ராஜாயாவில் 104, ஷா ஆலமில்-மில் 101 என நான்கு பகுதிகளில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளது.

மேலும், நாடு முழுவதும் 55 பகுதிகளில் மிதமான காற்றின் தரக் குறியீடும், 2 பகுதிகளில் தூய்மையான காற்றின் தரமும் பதிவாகியுள்ளன.

Related News

இந்தோனேசியாவில் இணைய மோசடியில் 30 மலேசியர்கள் ஈடுபட்டது எப்படி? குற்றப் பின்னணியை ஆராய்கிறது மலேசியா

இந்தோனேசியாவில் இணைய மோசடியில் 30 மலேசியர்கள் ஈடுபட்டது எப்படி? குற்றப் பின்னணியை ஆராய்கிறது மலேசியா

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து அவசியம்: ஈரான் அதிபரிடம் அன்வார் வலியுறுத்து

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து அவசியம்: ஈரான் அதிபரிடம் அன்வார் வலியுறுத்து

சிரம்பானில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்தது: 3 கார்கள் மண்ணில் புதைந்தன

சிரம்பானில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்தது: 3 கார்கள் மண்ணில் புதைந்தன

மலேசியத் தேர்தல் தலையீட்டிற்கு கிளவுட் ஏஐ பயன்படுத்தப்பட்டதா? – எம்சிஎம்சி விசாரணை

மலேசியத் தேர்தல் தலையீட்டிற்கு கிளவுட் ஏஐ பயன்படுத்தப்பட்டதா? – எம்சிஎம்சி விசாரணை

நேபாள பேரிடர்: நாளை நாடு திரும்புகிறது மலேசியாவின் ஸ்மார்ட் குழு

நேபாள பேரிடர்: நாளை நாடு திரும்புகிறது மலேசியாவின் ஸ்மார்ட் குழு

பீட்டர் ஆண்டனி விடுதலை விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு இல்லை - மலேசிய சிறைத்துறை விளக்கம்

பீட்டர் ஆண்டனி விடுதலை விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு இல்லை - மலேசிய சிறைத்துறை விளக்கம்