பேராக் மாநிலம், மஞ்சுங், ஆயர் தாவார் பகுதியில் உள்ள கம்போங் ராஜா ஹீத்தாம் என்ற இடத்தில், தோட்டப் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் மியன்மார் நாட்டவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக நேற்று காலை உள்ளூர் நபர் ஒருவர் ஆயர் தாவார் போலீஸ் நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளார்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இந்தக் கொலை தொடர்பான விசாரணைக்கு உதவும் வகையில் இரண்டு மியன்மார் நாட்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மஞ்சுங் மாவட்ட போலீஸ் தலைவர் ஹஸ்புல்லா அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.








