கெடா, சுங்கை பட்டாணிக்கு அருகே வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில் நிகழ்ந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆடவர் ஒருவரும் பெண் ஒருவரும் உயிரிழந்தனர்.
நேற்று பிற்பகல் 3.30 மணியளவில், தெற்கு நோக்கிய வழித்தடத்தின் 102ஆவது கிலோமீட்டரில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது டோயோட்டா அவான்ஸா கார் பின்னால் மோதியதாக நம்பப்படுகிறது.
மோதலின் தாக்கத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டதில் ஒருவர் சாலையில் விழுந்ததாகவும், மற்றொருவர் காரின் அடியில் சிக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, சுங்கை பட்டாணி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.








