Nov 23, 2026
Thisaigal NewsYouTube

பங்சாரில் ஆயுதங்களுடன் இரு கும்பல்கள் மோதல்: இருவர் கைது, எஞ்சியவர்களுக்கு போலீஸ் துறை வலைவீச்சு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பங்சாரில் ஆயுதங்களுடன் இரு கும்பல்கள் மோதல்: இருவர் கைது, எஞ்சியவர்களுக்கு போலீஸ் துறை வலைவீச்சு

கோலாலம்பூர், பங்சார் ஜாலான் தெலாவி பகுதியில் ஆயுதங்களுடன் இரு கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக இரு உள்ளூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களைக் கண்டறியும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தின் காணொளி திரேட்ஸ் சமூக ஊடகத்தில் பரவலாகப் பகிரப்பட்டது.

கைது செய்யப்பட்ட 34 மற்றும் 21 வயதுடைய இருவரும் பண்டார் பாரு சாலாக் திங்கி பகுதியில் பிடிபட்டதாக பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் அஹ்மாட் ஃபிர்டாவுஸ் முஸ்தஃபா கமால் தெரிவித்தார். அவர்களில் 34 வயது ஆடவர் மீது ஏற்கெனவே எட்டு குற்றப் பதிவுகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஆயுதங்கள் அல்லது மரணத்தை விளைவிக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு கலவரத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காகக் குற்றவியல் சட்டத்தின் 148ஆவது பிரிவின் கீழ் விசாரணை நடைபெறுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
இந்தியப் பிரஜைகளுக்கான 30 நாள் விசா விலக்கை நீட்டிக்க வேண்டும் – மாட்டா அரசாங்கத்திடம் கோரிக்கை

இந்தியப் பிரஜைகளுக்கான 30 நாள் விசா விலக்கை நீட்டிக்க வேண்டும் – மாட்டா அரசாங்கத்திடம் கோரிக்கை

சுங்கை பட்டாணிக்கு அருகே மோட்டார் சைக்கிள் விபத்து: இருவர் பலி

சுங்கை பட்டாணிக்கு அருகே மோட்டார் சைக்கிள் விபத்து: இருவர் பலி

11 ஆண்டுகளுக்கு முன்பு கொலை: இருவரின் மேல்முறையீட்டை நிராகரித்தது கூட்டரசு நீதிமன்றம்

11 ஆண்டுகளுக்கு முன்பு கொலை: இருவரின் மேல்முறையீட்டை நிராகரித்தது கூட்டரசு நீதிமன்றம்

யுகேஎம் பல்கலைக்கழகத்தில் நலன் முரண்பாடு புகார்: கிட்டத்தட்ட 8 மாதங்களாக நடவடிக்கை இல்லை – பிஏசி அம்பலம்

யுகேஎம் பல்கலைக்கழகத்தில் நலன் முரண்பாடு புகார்: கிட்டத்தட்ட 8 மாதங்களாக நடவடிக்கை இல்லை – பிஏசி அம்பலம்

பினாங்கில் 104 குடும்பங்களுக்கு சொந்த வீடு பெறும் வாய்ப்பு! மாத வாடகை 100 ரிங்கிட்டிலிருந்து தொடக்கம்

பினாங்கில் 104 குடும்பங்களுக்கு சொந்த வீடு பெறும் வாய்ப்பு! மாத வாடகை 100 ரிங்கிட்டிலிருந்து தொடக்கம்

மலேசியாவுக்குள் நுழையும் முன் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குக் கட்டாய போலீஸ் சோதனை

மலேசியாவுக்குள் நுழையும் முன் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குக் கட்டாய போலீஸ் சோதனை