Nov 23, 2026
Thisaigal NewsYouTube

பினாங்கில் 104 குடும்பங்களுக்கு சொந்த வீடு பெறும் வாய்ப்பு! மாத வாடகை 100 ரிங்கிட்டிலிருந்து தொடக்கம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பினாங்கில் 104 குடும்பங்களுக்கு சொந்த வீடு பெறும் வாய்ப்பு! மாத வாடகை 100 ரிங்கிட்டிலிருந்து தொடக்கம்

பினாங்கு மாநிலத்தில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் சொந்த வீடு பெறுவதற்கான வாய்ப்பை விரிவுபடுத்தும் வகையில், வாடகை செலுத்தி பின்னர் சொந்தமாக்கும் திட்டத்தின் கீழ் 104 பேருக்கு வீடுகளுக்கான சலுகைக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த நவம்பர் 20ஆம் தேதி கோம்தார் கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூமா முத்தியாராகூ திட்டத்தின் A மற்றும் B பிரிவுகளுக்கான சலுகைக் கடிதங்களை வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் வழங்கினார்.

இதில், ஏழு இடங்களில் செயல்படுத்தப்பட்ட எட்டு வீடமைப்புத் திட்டங்களின் கீழ் 98 பேருக்கு A பிரிவு வீடுகளும், ஆறு பேருக்கு B பிரிவு வீடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன என்று டத்தோ ஸ்ரீ சுந்தராஜு குறிப்பிட்டார்.

இந்தத் திட்டத்தின் கீழ், வீடுகளுக்கான மாத வாடகை 100 ரிங்கிட்டிலிருந்து 310 ரிங்கிட் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பராமரிப்புக் கட்டணத்தையும் சேர்த்து மாதாந்திர மொத்தத் தொகை வசூலிக்கப்படும். ஒப்பந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு, 15 முதல் 23 ஆண்டுகள் வரையிலான காலப்பகுதியில் வீடுகளைச் சொந்தமாக்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

இதற்கிடையில், 2030ஆம் ஆண்டுக்குள் 22 ஆயிரம் வீடுகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 13,917 வீடுகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது இலக்கில் 63.26 விழுக்காடு என்றும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

வீடு என்பது வெறும் தங்குமிடம் மட்டுமல்ல, குடும்பத்தின் நிலைத்தன்மைக்கும் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் அடிப்படையானது என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
இந்தியப் பிரஜைகளுக்கான 30 நாள் விசா விலக்கை நீட்டிக்க வேண்டும் – மாட்டா அரசாங்கத்திடம் கோரிக்கை

இந்தியப் பிரஜைகளுக்கான 30 நாள் விசா விலக்கை நீட்டிக்க வேண்டும் – மாட்டா அரசாங்கத்திடம் கோரிக்கை

சுங்கை பட்டாணிக்கு அருகே மோட்டார் சைக்கிள் விபத்து: இருவர் பலி

சுங்கை பட்டாணிக்கு அருகே மோட்டார் சைக்கிள் விபத்து: இருவர் பலி

11 ஆண்டுகளுக்கு முன்பு கொலை: இருவரின் மேல்முறையீட்டை நிராகரித்தது கூட்டரசு நீதிமன்றம்

11 ஆண்டுகளுக்கு முன்பு கொலை: இருவரின் மேல்முறையீட்டை நிராகரித்தது கூட்டரசு நீதிமன்றம்

பங்சாரில் ஆயுதங்களுடன் இரு கும்பல்கள் மோதல்: இருவர் கைது, எஞ்சியவர்களுக்கு போலீஸ் துறை வலைவீச்சு

பங்சாரில் ஆயுதங்களுடன் இரு கும்பல்கள் மோதல்: இருவர் கைது, எஞ்சியவர்களுக்கு போலீஸ் துறை வலைவீச்சு

யுகேஎம் பல்கலைக்கழகத்தில் நலன் முரண்பாடு புகார்: கிட்டத்தட்ட 8 மாதங்களாக நடவடிக்கை இல்லை – பிஏசி அம்பலம்

யுகேஎம் பல்கலைக்கழகத்தில் நலன் முரண்பாடு புகார்: கிட்டத்தட்ட 8 மாதங்களாக நடவடிக்கை இல்லை – பிஏசி அம்பலம்

மலேசியாவுக்குள் நுழையும் முன் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குக் கட்டாய போலீஸ் சோதனை

மலேசியாவுக்குள் நுழையும் முன் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குக் கட்டாய போலீஸ் சோதனை