‘டத்தோ’ பட்டம் பெற்ற 68 வயதான முன்னாள் ராணுவ அதிகாரி யஹ்யா ஹாஷிம், 20 வயது பெண் கோல்ஃப் உதவியாளரின் கண்ணியத்தை குலைக்கும் வகையில் அத்துமீறல் புரிந்ததாக மலாக்கா ஆயர் கேரோ மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
இந்தச் சம்பவமானது கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி டியாரா மலாக்கா கோல்ஃப் & கன்ட்ரி கிளப்-ல் காலை 8.30 மணியிலிருந்து 12.30 மணிக்குள் நடந்ததாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில், தம் மீதான குற்றச்சாட்டை மறுத்த யஹ்யா ஹாஷிம், நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவியல் சட்டம் பிரிவு 354-ன் கீழ், 10 ஆண்டுகள் வரை சிறை, அபராதம் அல்லது பிரம்படி அல்லது இவற்றில் ஏதேனும் இரண்டு தண்டனைகள் விதிக்கப்படலாம்.
இந்நிலையில் இவ்வழக்கின் அடுத்த விசாரணை வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது.








