Sep 4, 2026
Thisaigal NewsYouTube
"ஸ்மார்ட் '' குழு எந்த நேரத்திலும் புறப்படத் தயாராக உள்ளது - நேபாள தூதரிடம் விஸ்மா புத்ரா உறுதி
தற்போதைய செய்திகள்

"ஸ்மார்ட் '' குழு எந்த நேரத்திலும் புறப்படத் தயாராக உள்ளது - நேபாள தூதரிடம் விஸ்மா புத்ரா உறுதி

Share:

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து, அவசர உதவி மற்றும் மீட்புப் பணிகளுக்காக, ஸ்மார்ட் குழுவை எந்த நேரத்திலும் அந்நாட்டிற்கு அனுப்பத் தயாராக இருப்பதாக மலேசிய வெளியுறவு துணை அமைச்சர் டத்தோ லுகானிஸ்மன் அவாங் சௌனி தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூரிலுள்ள நேபாள தூதரகத்திற்குச் சென்ற அவர், பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், நேபாள அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க மலேசியா தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.

மேலும், இரங்கல் புத்தகத்திலும் கையெழுத்திட்டார்.

இதற்கிடையில், நேபாள அரசின் சார்பில் அந்நாட்டு தூதர் முதிதா பாஜ்ராச்சார்யா, துயரமான இந்த நேரத்தில் மலேசியா தெரிவித்த இரங்கலுக்கும், நேபாள மக்களுடன் வெளிப்படுத்திய ஒற்றுமைக்கும் துணை அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.

அதேவேளையில், மலேசிய அரசாங்கம் வழங்கிய நிதியுதவிக்கும் அவர் நன்றி தெரிவித்ததாக நேபாள தூதரகம் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி நேபாள–சீனா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 4,200-க்கும் அதிகமானோர் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.

Related News

16-வது பொதுத்தேர்தலை முன்கூட்டியே நடத்துவது குறித்து பரிசீலிக்கத் தயார் / தலைவர்களின் கோரிக்கைக்கு அன்வார் பதில்

16-வது பொதுத்தேர்தலை முன்கூட்டியே நடத்துவது குறித்து பரிசீலிக்கத் தயார் / தலைவர்களின் கோரிக்கைக்கு அன்வார் பதில்

பெர்லிஸில் ஆலயம் இடிப்பு தொடர்பான சர்ச்சைக்குரிய டிக்டாக் பதிவு – ஒருவர் கைது

பெர்லிஸில் ஆலயம் இடிப்பு தொடர்பான சர்ச்சைக்குரிய டிக்டாக் பதிவு – ஒருவர் கைது

காட்டுத்தீ சம்பவங்களுக்குக் காரணமான மலேசிய நிறுவனங்களின் பெயர்களை வெளியிட கோரிக்கை

காட்டுத்தீ சம்பவங்களுக்குக் காரணமான மலேசிய நிறுவனங்களின் பெயர்களை வெளியிட கோரிக்கை

கோஃல் உதவியாளரிடம் அத்துமீறல்: 'டத்தோ' பட்டம் பெற்ற முன்னாள் இராணுவ அதிகாரி மீது குற்றச்சாட்டு

கோஃல் உதவியாளரிடம் அத்துமீறல்: 'டத்தோ' பட்டம் பெற்ற முன்னாள் இராணுவ அதிகாரி மீது குற்றச்சாட்டு

மலேசியா ஏர்லைன்சின் 99 சதவிகித விமானப் பணியாளர்களுக்கு போதைப் பொருள் பரிசோதனை நிறைவு

மலேசியா ஏர்லைன்சின் 99 சதவிகித விமானப் பணியாளர்களுக்கு போதைப் பொருள் பரிசோதனை நிறைவு

கெசாஸ் நெடுஞ்சாலையை மூடிய பனிபொழிவு? - உண்மையில் நடந்தது என்ன?

கெசாஸ் நெடுஞ்சாலையை மூடிய பனிபொழிவு? - உண்மையில் நடந்தது என்ன?