அரசாங்கத்தை விமர்சிக்கும் உள்ளடக்கங்களுக்குத் தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், எதிர்காலத்தில் இன்னும் பெரிய அளவிலான போராட்டங்கள் நடத்தப்படும் என்று மலேசிய டிக்டாக் அலுவலகத்திற்கு வெளியே 'ஹிம்புனான் கெகார் டிக்வாக்' எனும் பெயரில் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எச்சரித்துள்ளனர்.
சமூக ஊடகப் பிரபலங்கள், உள்ளடக்க உருவாக்குநர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், தங்களின் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவிக்கும் கணக்குகளை டிக்டாக் நிறுவனம் அநியாயமாகக் கட்டுப்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
டிக்டாக் கணக்குகளை முடக்குவது தொடர்ந்தால் அடுத்தடுத்த போராட்டங்கள் வெடிக்கும் என்று வர்த்தகர் ஆல்பர்ட் டெய் எச்சரித்துள்ள வேளையில், சமூக ஊடகத் தளங்கள் பயனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது வெளிப்படையான கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று பெர்சத்து இளைஞர் பிரிவு நிர்வாகக் குழு உறுப்பினர் நாயிம் ப்ரண்டேஜ் வலியுறுத்தியுள்ளார்.








