Jun 13, 2026
Thisaigal NewsYouTube
இரவு நேர ஓட்டப்பந்தய வீரர்களுக்குத் தனிப் பாதைகள்: சில சாலைகளை மூட மாநகர்மன்றம் திட்டம்
தற்போதைய செய்திகள்

இரவு நேர ஓட்டப்பந்தய வீரர்களுக்குத் தனிப் பாதைகள்: சில சாலைகளை மூட மாநகர்மன்றம் திட்டம்

Share:

கோலாலம்பூரில் ஓட்டப்பந்தயப் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்குப் பாதுகாப்பான பொழுதுபோக்கு வழிகளை உருவாக்குவதற்காக, இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை சில முக்கியச் சாலைகளை மூடுவது குறித்துக் கோலாலம்பூர் மாநகர்மன்றம் டி.பி.கே.எல். ஆராய்ந்து வருகிறது.

கே.எல் கார் ஃப்ரீ மார்னிங் போன்ற இந்தத் திட்டம் மூலம் குறைந்த வாகன நடமாட்டம் உள்ள பகுதிகள் அடையாளம் காணப்பட்டு வருவதாக கூட்டரசுப் பிரதேசத்திற்கான பிரதமர்துறை அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக டத்தாரான் மெர்டேகா மற்றும் சுல்தான் அப்துல் சமத் கட்டிடம் ஆகியப் பகுதிகளைச் சுற்றியுள்ள சாலைகளில் இந்த முயற்சி தொடங்கப்படவுள்ள வேளையில், ஓட்டப்பந்தயக் கழகங்களின் பிரதிநிதிகளைக் கொண்டு தற்போதைய நடைபாதைகளைத் ஆய்வு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஓட்டப்பந்தய வீரர்கள் அதிகாலை 5.30 மணி முதலே சில பாதைகளைப் பயன்படுத்த அனுமதிப்பது குறித்துக் போலீசாருடன் விவாதிக்கப்படும் என்று கோலாலம்பூர் மேயர் டத்தோ ஸ்ரீ ஃபட்லூன் மாக் உஜுத் தெரிவித்துள்ளார்.

Related News