சுங்ஙை லாஙாட் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதால் பெட்டாலிங், ஜெயா, கோலாலம்பூர், உலு லங்காட் மாவட்டங்களில் அடுத்த மாதம் 10 ஆம் தேதி நீர் விநியோகத்தடைகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் அக்டோபர் 10 ஆம் தேதி காலை 9 மணியிலிருந்து பல பகுதிகளில் நீர் விநியோகத் தடை ஏற்படும் என்று பெங்ஙுருசான் ஆயிர் சிலாங்கூர் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனமான ஆயிர் சிலாங்கூர் அறிவித்துள்ளது.
பராமரிப்புப் பணிகள் யாவும் அன்றைய தினமே இரவு 7 மணிக்குள் பூர்த்தியடைந்த விடும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம் கட்டம் கட்டமாக வழக்க நிலைக்குத் திரும்பும். எந்தெந்த பகுதிகளில் நீர் விநியோகத் தடைகள் ஏற்படும் என்ற பெயர் பட்டியலை ஆயிர் சிலாங்கூர் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பதிவில் பொது மக்கள் காணலாம் என்று ஆயிர் சிலாங்கூர் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








