Sep 23, 2026
Thisaigal NewsYouTube
மலாக்கா கட்டிட விபத்து: உயிர்சேதம் இல்லை என தீயணைப்புத் துறை உறுதி
தற்போதைய செய்திகள்

மலாக்கா கட்டிட விபத்து: உயிர்சேதம் இல்லை என தீயணைப்புத் துறை உறுதி

Share:

மலாக்கா, ஜூலை.19-

மலாக்கா தமான் கோத்தா லக்சாமானா பகுதியில் புதுப்பிப்பு பணிகள் நடைபெற்ற இருமாடி கடைக் கட்டிடம் ஒன்று நேற்று இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் இல்லை என்பதை மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

அக்கட்டிடத்தில் பணியாற்றிய 3 வங்காள தேசத் தொழிலாளர்களும், 1 ரோஹிங்கியா தொழிலாளரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த 2 வாகனங்கள் பலத்த சேதமடைந்தன.

இந்நிலையில், பாதுகாப்பு ஆய்வுக்குப் பிறகு சம்பவ இடமானது மேலதிக நடவடிக்கைக்காக மலாக்கா வரலாற்று மாநகர் மன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் Mohd Zaidi Ma'at தெரிவித்துள்ளார்.

Related News