Oct 16, 2026
Thisaigal NewsYouTube

சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களுக்கு பாதுகாப்பு அளித்த ஆணும் பெண்ணும் குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களுக்கு பாதுகாப்பு அளித்த ஆணும் பெண்ணும் குற்றச்சாட்டு

பட்டர்வொர்த், டிச.2-


கடந்த மாதம் எட்டு சட்டவிரோதக்குடியேற்றக்கார்கள் நாட்டிற்குள் கொண்டு வருவதற்கு மனித கடத்தலில் ஈடுபட்டதுடன் அவர்களுக்கு பாதுகாப்பு அளித்ததாக ஓர் ஆணும், பெண்ணும் இன்று பட்டர்வொர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

41 வயது நூர் ஹபிஸா முகமட் அமின் மற்றும் 42 வயது முகமட் யாஸிட் அப்துல்லா ஆகிய இருவரும் நீதிபதி நோர் அஸா கஸ்ரான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு,குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

இவ்விருவரும் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் செபராங் பிறை உத்தாராவில் பெர்மாத்தாங் பூலோ, ஜாலான் பெர்மாத்தாங் சுங்கை டுவா-வில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்க வகை செய்யும் 2007 ஆம் ஆண்டு குடிநுழைவு கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் இருவரும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →