ஜோகூர் மாநிலத்தில் போதைப்பொருள் கலந்த மின்-சிகரெட் திரவங்களைத் தயாரித்து விநியோகித்து வந்த கும்பலைச் சேர்ந்த ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட ஐந்து அதிரடி சோதனைகளில் இந்தக் கும்பல் முறியடிக்கப்பட்டது.
36 முதல் 46 வயதுக்குட்பட்ட ஆறு ஆண்கள் மற்றும் ஒரு வெளிநாட்டுப் பெண் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 10.68 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள, சுமார் 6.5 லட்சம் போதைப்பொருள் பழக்கமுடையவர்கள் பயன்படுத்தக்கூடிய 210 கிலோகிராம் எடையுள்ள மெத்தம்பேட்டமைன் திரவம், கோகெயின், ஹெராயின் மற்றும் எக்ஸ்டசி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று ஜோகூர் மாநில போலீஸ் துணைத் தலைவர் துணை கமிஷனர் ஹூ சுவான் ஹுவாட் தெரிவித்தார்.
ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பைச் சேமிப்புக் கிடங்காகப் பயன்படுத்தி, போதைப்பொருளை உள்ளூர் சந்தையில் விநியோகித்து வந்த இக்கும்பலின் தலைவர் உட்பட அனைவரும், வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை 7 நாட்கள் போலீஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவவர் மேலும் கூறினார்








