Nov 1, 2026
Thisaigal NewsYouTube

50 மில்லியன் அபராதத்தை நஜிப் இன்னும் செலுத்தவில்லை – ஏஜிசி தகவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
50 மில்லியன் அபராதத்தை நஜிப் இன்னும் செலுத்தவில்லை – ஏஜிசி தகவல்

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக், தனக்கு விதிக்கப்பட்ட 50 மில்லியன் ரிங்கிட் அபராதத் தொகையை இன்னும் செலுத்தவில்லை என சட்டத்துறை தலைமை அலுவலகமான ஏஜிசி தெரிவித்துள்ளது.

மேலும், அபராதத்தைச் செலுத்துவதற்கு குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று ஏஜிசி தலைவர் டுசுக்கி மொக்தார் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் நஜிப், தமது அபராதத் தொகையைச் செலுத்தாத வரை, அவர் தொடர்ந்து சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பதையும் டுசுக்கி மொக்தார் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி, மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், நஜிப்புக்கு நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு வழங்கினார்.

அதன் படி, வரும் 2028 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரை வீட்டுக் காவலில் எஞ்சிய சிறைத்தண்டனையை அனுபவிப்பார் என்றும், அதற்கு முன்னதாக அவர் 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
சிறு வணிகர்கள், சாலையோர வியாபாரிகளுக்கு 1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: அன்வார் அதிரடி அறிவிப்பு

சிறு வணிகர்கள், சாலையோர வியாபாரிகளுக்கு 1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: அன்வார் அதிரடி அறிவிப்பு

தீபாவளியை முன்னிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெலுக் இந்தான் சாய்ந்த கோபுரம்

தீபாவளியை முன்னிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெலுக் இந்தான் சாய்ந்த கோபுரம்

பாகானில் 56 இந்திய மாணவர்களுக்கு மித்ரா மூலம் மடிக்கணினி, ரொக்க உதவித்தொகை வழங்கப்பட்டது

பாகானில் 56 இந்திய மாணவர்களுக்கு மித்ரா மூலம் மடிக்கணினி, ரொக்க உதவித்தொகை வழங்கப்பட்டது

31 இந்தியக் குடும்பங்களுக்கு தீபாவளி பரிசாக நிலப்பட்டா வழங்கினார் - டத்தோ சிவநேசன்

31 இந்தியக் குடும்பங்களுக்கு தீபாவளி பரிசாக நிலப்பட்டா வழங்கினார் - டத்தோ சிவநேசன்

அரசு ஊழியர்கள் வேஸ் தடையை முழுமையாகப் பின்பற்றுவர் – பொதுச் சேவைத் துறை நம்பிக்கை

அரசு ஊழியர்கள் வேஸ் தடையை முழுமையாகப் பின்பற்றுவர் – பொதுச் சேவைத் துறை நம்பிக்கை

சிறு தொழில்முனைவோருக்கு கூடுதலாக 200 மில்லியன் ரிங்கிட் நிதி – பிரதமர் அறிவிப்பு

சிறு தொழில்முனைவோருக்கு கூடுதலாக 200 மில்லியன் ரிங்கிட் நிதி – பிரதமர் அறிவிப்பு