ஷா ஆலாம், நவம்பர்.15-
மலேசியாவிற்கு வருகை தாருங்கள் ஆண்டை, நாடு அடுத்த ஆண்டு அனுசரிக்கிறது. இந்நிலையில் நாட்டின் பிரதான நுழைவாசலாக விளங்கும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் ஏரோடிரேன் இடையூறு மற்றும் விமான நிலையத்தின் கூரையில் விரிசல் ஏற்பட்டு மழை நீர் கொட்டிய சம்பவம் உட்பட பலதரப்பட்ட பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணுமாறு சுபாங் எம்.பி. வோங் சென் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்.
2026 மலேசியாவிற்கு வருகை தரும் ஆண்டு நெருங்கி விட்டது. அனைத்துலக சுற்றுப்பயணிகளின் பிரதான நுழைவாயிலாக விளங்கும், கேஎல்ஐஏ விமான நிலையத்தின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணாமல் இருப்போமானால் அது நாட்டின் தோற்றத்தைப் பாதிக்கச் செய்யும் என்று அவர் நினைவுறுத்தினார்.
இந்நிலையில் கிட்டத்தட்ட 30 ஆண்டு கால பழமை வாய்ந்த கேஎல்ஐஏ விமான நிலையத்தின் முனையம் ஒன்றில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்று வோங் சென் வலியுறுத்தியுள்ளார்.








