Jun 30, 2026
Thisaigal NewsYouTube
கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு
தற்போதைய செய்திகள்

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

Share:

ஜோகூர் மாநிலம் கோத்தா திங்கியில் உள்ள பான்டாய் பத்து லாயர் கடற்கரையில், கடந்த ஜனவரி 1-ஆம் தேதி, நீரில் மூழ்கிய இருவரின் உயிரைக் காப்பாற்றிய நபரின் வீரத்தை, ஜோகூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை பாராட்டியுள்ளது.

36 வயதான முகமட் டானியல் முகமட் சானின், தனது குடும்பத்துடன் விடுமுறையில் இருந்த போது கடற்கரையிலிருந்து உதவி கேட்டு அலறும் சத்தம் கேட்டதாக தெரிவித்தார்.

முதலில், மற்றொரு குடும்பம் கடற்கரையில் விளையாடுவதாக எண்ணிய முகமட் டானியல், அருகில் சென்ற போது, ஒரு சிறுவனும், இளம் பெண்ணும் கடலின் ஆழத்திற்கு இழுத்துச் செல்லப்படுவதைக் கண்டுள்ளார்.

உடனடியாகத் தனது பாதுகாப்பை பற்றி சிந்திக்காமல் கடலில் குதித்து, இருவரையும் கரைக்கு கொண்டு வந்ததாக அவர் தெரிவித்தார்.

இரண்டு குழந்தைகளின் தந்தையான முகமட் டானியல், திறமையான நீச்சல் வீரராக இல்லாத போதிலும் கூட, உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற உறுதி, தன்னை உடனடியாக செயல்பட வைத்ததாக கூறினார்.

இந்நிலையில், ஜோகூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அவருக்கு சான்றிதழும், சன்மானமும் வழங்கி கௌரவித்துள்ளது.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு