Jun 30, 2026
Thisaigal NewsYouTube
உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்
தற்போதைய செய்திகள்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

Share:

சமூக ஊடகப் பிரபலமான நளினி கோதண்டபாணி, கடந்த ஆண்டு மாற்றுத்திறனாளி உணவக ஊழியர் ஒருவரை, தாக்கிய குற்றச்சாட்டில், குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, பெட்டாலிங் ஜெயா மேஜிஸ்திரேட் நீதிமன்றம், இன்று அவருக்கு 2,000 ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.

இத்தீர்ப்பை வழங்கிய நீதிபதி அமிரா சரியாட்டி ஜைனல், அபராதத் தொகையை நளினி செலுத்தத் தவறினால், ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

குற்றஞ்சாட்டப்பட்ட 41 வயதான நளினி, அந்த அபராத தொகையைச் செலுத்தினார்.

மூன்று குழந்தைகளின் தாயும், தகவல் தொழில்நுட்ப பொறியாளருமான அவர், கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி, மாலை 4 மணியளவில் செர்டாங் ராயா, செரி கெம்பாங்கான்னில் உள்ள ஒரு விரைவுணவகத்தில், 45 வயதான ராணி ஆறுமுகம்த்தை தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவ்வழக்கானது குற்றவியல் சட்டம் பிரிவு 323-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு