Jun 30, 2026
Thisaigal NewsYouTube
தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

Share:

கடந்த ஆண்டு தனது மனைவியும் மகனையும் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் ஒருவரின் வழக்கு விசாரணை, முழுமையான தடயவியல் அறிக்கைகள் இன்னும் கிடைக்கப்பெறாத நிலையில், வரும் ஏப்ரல் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

34 வயதான டாக்டர் சியா டோங் ஹாங், கடந்த 2025-ஆம் ஆண்டு, டிசம்பர் 30ஆம் தேதி, இரவு 9.50 முதல் 10.34 மணி வரை, பண்டார் டத்தோ ஆன் பகுதியில் உள்ள ஜாலான் பெர்ஜிரானன் 11/12 என்ற இடத்தில், தனது மனைவியும் மகனையும் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

தனியார் கிளினிக் மருத்துவரான டாக்டர் சியா, பொந்தியான், உலு சோ தடுப்புக் காவல் மையத்திலிருந்து அழைத்து வரப்பட்டு, மூன்று தனித்தனி மஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டபோது சாந்தமாக இருந்ததாகக் கூறப்படுகின்றது.

நீதிபதிகள் நபிலா நிஜாம், ஏ. ஷார்மிணி மற்றும் அதிஃபா ஹசிமா வஹாப் ஆகியோர், இவ்வழக்கில் தடயவியல் அறிக்கைகள் உட்பட நிலுவையிலுள்ள அறிக்கைகள் கிடைக்கப்பெறுவதற்காக வரும் ஏப்ரல் 29-ஆம் தேதியை நிர்ணயித்தனர்.

அதேவேளையில், கொலை வழக்குகள் உயர் நீதிமன்றத்தின் கீழ் வருவதால், இந்த வழக்கை அதிகாரப்பூர்வமாக மாற்றுவதற்கான தேதியாக வரும் செப்டம்பர் 28-ஆம் தேதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு