Oct 16, 2026
Thisaigal NewsYouTube

3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப்பொருட்களை கைப்பற்றினர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப்பொருட்களை கைப்பற்றினர்

டிச.16-

பல்வேறு பகுதிகளில் காவல் துறை நடத்திய திடீர் சோதனையில் கிட்டத்தட்ட 3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப்பொருட்களை கைப்பற்றி, ஒரு போதைப்பொருள் கும்பலை முறியடித்துள்ளனர். GEORGE TOWN, Butterworth ஆகிய பகுதிகளில் கடந்த டிசம்பர் 6 தேதியிலும் டிசம்பர் 13 ஆம் தேதியிலும் நடந்த இந்த சோதனையில் 26 வயது முதல் 42 வயது வரையிலான 6 பேர் கைது செய்யப்பட்டனர் என பினாங்கு மாநிலக் காவல் துறைத் துணைத் தலைவர் Mohd Alwi Zainal Abidin கூறினார்

பொதுமக்களின் தகவலின் அடிப்படையிலும் புலனாய்வுத் துறையின் கண்காணிப்பாலும், காவல் துறையினர் இந்த சோதனையை நடத்தினர். சோதனையின் போது, பல்வேறு வகையான போதைப்பொருட்கள், வாகனங்கள், 26,085 ரொக்கப் பணம், நகைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட 6 பேரும் விசாரணைக்கு உதவுவதற்காக இம்மாதம் 20ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →