ஷா ஆலாம், செப்டம்பர்.29-
மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷாவின் புதல்வரும், பட்டத்து இளவரசருமான ராஜா மூடா தெங்கு அமீர் ஷாவின் அரச திருமண ஊர்வலத்தையொட்டி வரும் அக்டோபர் 2 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 7 மணி முதல் 10 மணி வரை 3 மணி நேரத்திற்கு கிள்ளான், ஜாலான் இஸ்தானா சாலை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கிள்ளானில் அரண்மனைக்குச் செல்லும் ஜாலான் இஸ்தானா சாலையைத் தவிர இதர சாலைகள் மூடப்படாது. எனினும் ஊர்வலம் நிறைவு பெறும் வரையில் போக்குவரத்து முறை அணுக்கமாகக் கண்கணிக்கப்படும் என்று தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரம்லி காசா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.








