நாடெங்கிலும் புகைமூட்ட பாதிப்புகளுக்கு மத்தியில், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, பஹாங் மற்றும் பினாங்கு மாநிலங்களில் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் பள்ளிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நாளை மீண்டும் திறக்கப்படவுள்ளன.
அதேவேளையில், சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறை, பள்ளிகளில் அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளையும் நிறுத்த உத்தரவிட்டுள்ளதுடன், மாணவர்கள் முகக்கவசம் அணியுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், பள்ளி நிர்வாகங்கள் காற்றுத் தரக் குறியீட்டை தொடர்ந்து கண்காணிப்பதுடன், அதிக பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய மாணவர்களின் உடல்நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் உடல்நலம் குறித்து கவலைப்படும் பெற்றோர், முதலில் பள்ளிக்குத் தகவல் தெரிவித்துவிட்டு குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் இருக்கலாம் என்றும் மாநிலக் கல்வித் துறை கூறியுள்ளது.








