Oct 18, 2026
Thisaigal NewsYouTube

நஜிப்பின் வீட்டுக் காவல்: விதிமுறைகள் தயாரிக்கும் இறுதிக் கட்டத்தில் சிறைத்துறை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நஜிப்பின் வீட்டுக் காவல்: விதிமுறைகள் தயாரிக்கும் இறுதிக் கட்டத்தில் சிறைத்துறை

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்கும் நடைமுறையை செயல்படுத்துவதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை சிறைத்துறை வகுத்து வருகின்றது.

இதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

ஃபெல்டா தெனாங் பகுதியில் இன்று நடைபெற்ற தேசிய போதைப்பொருள் தடுப்பு அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சைஃபுடின், மன்னிப்பு வாரியத்தின் செயலகம் அனுப்பிய கடிதத்தைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் வீட்டுக் காவலை நடைமுறைப்படுத்துவதற்கான நிபந்தனைகளை நிர்ணயிக்கும் அதிகாரம் சிறைத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டில் இதற்கு முன்பு வீட்டுக் காவல் நடைமுறையில் இருந்ததில்லை என்பதால், மன்னிப்பு வாரிய செயலகம் சிறைத்துறைக்கு அனுப்பிய கடிதத்தில், தேவையான நிபந்தனைகளை விதிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சைஃபுடின் தெரிவித்துள்ளார்.

எனவே, அதற்கான விதிமுறைகளை உருவாக்குவதே தங்களது பணி என்றும் சைஃபுடின் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →