Oct 18, 2026
Thisaigal NewsYouTube

பருவ மழைக் காலம்: பேராவில் ஜனவரி 17 வரையில் மலையேற்ற நடவடிக்கைகளுக்குத் தடை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பருவ மழைக் காலம்: பேராவில் ஜனவரி 17 வரையில் மலையேற்ற நடவடிக்கைகளுக்குத் தடை

பருவ மழைக் காலத்தை முன்னிட்டு, பேரா மாநிலத்தில் உள்ள நிரந்தர வனக் காப்பகங்களில், வரும் நவம்பர் 2 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 17 -ஆம் தேதி வரை, மலையேற்றப் பாதைகள் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு மூடப்படுவதாக அம்மாநில வனத்துறை அறிவித்துள்ளது.

வானிலை முன்னறிவிப்பு மற்றும் தற்போதைய இடர் மதிப்பீடுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில வனத்துறை இயக்குநர் டத்தோ முஹமட் பஸ்ரி அப்துல் மனாஃப் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தக் காலகட்டத்தில் காட்டுக்குள் நடைபயணம், நான்கு சக்கர வாகனப் பயணம் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், மலையேற்றப் பாதைகளைப் பராமரிக்கும் திட்டத்துக்கு இந்தத் தடை பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் வரும் நவம்பர் 21 முதல் டிசம்பர் 26 -ஆம் தேதி வரை கோலா கங்சார், லாருட், மாத்தாங் மற்றும் செலாமா, கிந்தா, மஞ்சோங் மற்றும் பேராக் செலாத்தான் ஆகிய வனப் பகுதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →