ரானாவ் மற்றும் நாடெங்கிலும் உள்ள வெளிநாட்டினருக்குச் சொந்தமான கடைகளுக்குத் தீ வைக்குமாறு மக்களைத் தூண்டும் வகையில் வெளியிடப்பட்ட முகநூல் பதிவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தப் பதிவு பொதுமக்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றதுடன், நீக்கப்படுவதற்கு முன்பு சுமார் 200 கருத்துகளையும் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி, முகநூலில் இந்தப் பதிவை போலீசார் கண்டறிந்ததாக ரானாவ் மாவட்ட போலீஸ் தலைவர் முர்சாலின் மஹ்மூட் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த பதிவு நீக்கப்படுவதற்கு முன்பாக அதன் ஸ்கிரின்ஷோட்களை அதிகாரிகள் பதிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்தப் பதிவில் #பிடிஆர்எம் என்ற ஹேஷ்டேக்கும் இடம் பெற்றிருந்ததாகவும், அது பொதுமக்களிடையே அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியதாகவும் முர்சாலின் மஹ்மூட் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998-இன் பிரிவு 233-ன் கீழ் ரானாவ் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.








