Oct 18, 2026
Thisaigal NewsYouTube

மாணவிகள் ஏஐ ஆபாசப் பட விவகாரம்: நடைமுறைகளை மீறியதாக போலீஸ் மீது வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மாணவிகள் ஏஐ ஆபாசப் பட விவகாரம்: நடைமுறைகளை மீறியதாக போலீஸ் மீது வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு

சிரம்பான் இடைநிலைப் பள்ளி மாணவிகளின் ஆபாசப் படங்களைச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கியதாகக் கூறப்படும் வழக்கு விசாரணையில், அடையாள அணிவகுப்பின் போது பாதிக்கப்பட்ட மாணவிகளைச் சந்தேக நபருக்கு நேரில் காட்டியதன் மூலம், போலீசார் சட்ட நடைமுறைகளை மீறியதாக அவர்களது வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் சார்பில் ஆஜராகும் ங் கியான் நாம் & பார்ட்னர்ஸ் சட்ட நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், போலீசாரின் இந்த நடவடிக்கையால் சந்தேக நபர் தங்களுக்குப் பதிலடி கொடுக்கக்கூடும் என்ற அச்சம் மாணவிகளிடையே ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடையாள அணிவகுப்பின் போது சந்தேக நபர்களால் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களைக் கண்டறிய முடியாத வகையில் கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும், போலீசாரின் நடவடிக்கை அந்த நடைமுறைகளுக்கு முரணாக இருப்பதாகவும் சட்ட நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்டவர்கள் சிறார்கள் என்பதால், சிறார்கள் சட்டம் 2001-இன் அடிப்படையில் அவர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பும் உணர்வுபூர்வமான அணுகுமுறையும் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →