கிளந்தான் மாநிலத்தில் போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் அதிகரித்துள்ள போதிலும், நடப்பில் அங்கு போதைப்பொருள் விநியோகம் கணிசமாகக் குறைந்துள்ளதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ முஹ்மட் யுசோஃப் மாமாட் தெரிவித்துள்ளார்.
எல்லைத் தாண்டிய போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் பலனளிக்கத் தொடங்கியிருப்பதை இது காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், அண்டை நாடுகளிலிருந்து கிளந்தான் மாநிலத்திற்குள் போதைப்பொருள் கொண்டு வரப்படுவது குறைந்துள்ளதாகவும் முஹ்மட் யுசோஃப் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 15 -ஆம் தேதி முதல் போதைப்பொருள் பிரச்சினையைக் கட்டுப்படுத்த புதிய உத்திகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், தினசரி அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








