கோலாலம்பூர், டிசம்பர்.15-
நாட்டில் சில மாநிலங்களில் இடியுடன் கூடிய கனத்த மழை வரும் வியாழக்கிழமை வரை தொடரும் என்ற மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட்மலேசியா அறிவித்துள்ளது.
கிளந்தான், திரெங்கானு, பகாங், ஜோகூர், பேரா முதலிய மாநிலங்களில் அடை மழைத் தொடரும் என்று இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் மெட்மலேசியா தெரிவித்துள்ளது.








