Jun 29, 2026
Thisaigal NewsYouTube
2026 நோன்புப் பெருநாளை முன்னிட்டு 27 வகை பொருட்களுக்கு உச்ச வரம்பு விலை நிர்ணயம்
தற்போதைய செய்திகள்

2026 நோன்புப் பெருநாளை முன்னிட்டு 27 வகை பொருட்களுக்கு உச்ச வரம்பு விலை நிர்ணயம்

Share:

சிரம்பான், மார்ச்.15-

நெகிரி செம்பிலான், சிரம்பான் 2-வில் உள்ள AEON பேரங்காடிக் கிளையில் 2026-ஆம் ஆண்டு நோன்புப் பெருநாள் காலத்திற்கான உச்ச வரம்பு விலைத் திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த விலைக்கட்டுப்பாட்டுத் திட்டம் மார்ச் 14 முதல் மார்ச் 28 வரை என மொத்தம் 15 நாட்களுக்குச் செயல்பாட்டில் இருக்கும் என்று நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் ரெப்பா சட்டமன்ற உறுப்பிருமான வீரப்பன் சுப்ரமணியம் தெரிவித்தார்.

பயன்பாட்டில் இருக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் வெங்காயம், இறைச்சி, மீன், காய்கறிகள் உள்ளிட்ட மொத்தம் 27 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

விதிமுறைகளை மீறி அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு 2011-ஆம் ஆண்டின் விலைக் கட்டுப்பாட்டு, ஆதாய மீட்டல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும். விலை உயர்வு அல்லது விதிமீறல்கள் தொடர்பாகப் பொதுமக்கள் தங்களின் புகார்களைத் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு