May 3, 2026
Thisaigal NewsYouTube
ஜார்ஜ்டவுனில் மரம் விழுந்து இரண்டு கார்கள் சேதம்
தற்போதைய செய்திகள்

ஜார்ஜ்டவுனில் மரம் விழுந்து இரண்டு கார்கள் சேதம்

Share:

ஜார்ஜ்டவுன், மார்ச்.15-

ஜார்ஜ்டவுன், லோரோங் சிரம்பானில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று காலை மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்ததில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த புரோட்டோன் வீரா, பெரோடுவா அல்ஸா ஆகிய இரண்டு கார்கள் பலத்த சேதமடைந்தன. காலை 8.21 மணிக்கு தகவல் கிடைத்ததும் ஜாலான் பேரா தீயணைப்பு - மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 10 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் கார்களின் மேற்கூரைப்பகுதி நசுங்கிய போதிலும், சம்பவத்தின் போது கார்களுக்குள் யாரும் இல்லாததால் உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என பினாங்கு மாநிலத் தீயணைப்பு – மீட்புப் படையின் உதவி இயக்குநர் ஜோன் சாகூன் பிரான்சிஸ் தெரிவித்தார்.

Related News