Mar 15, 2026
Thisaigal NewsYouTube
வாடகைக் கொள்முதல் திருத்தச் சட்டம் ஜூன் 1 முதல் அமல்: பயனீட்டாளர்களுக்குக் கூடுதல் ஆதாயம்
தற்போதைய செய்திகள்

வாடகைக் கொள்முதல் திருத்தச் சட்டம் ஜூன் 1 முதல் அமல்: பயனீட்டாளர்களுக்குக் கூடுதல் ஆதாயம்

Share:

கோத்தா கினபாலு, மார்ச்.15-

Akta Sewa Beli எனப்படும் வாடகை கொள்முதல் சட்டம் 1967-இல் செய்யப்பட்டுள்ள புதிய திருத்தங்கள் வரும் ஜூன் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும் என உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிஸான் முஹமட் அலி அறிவித்துள்ளார். இந்தத் திருத்தத்தின் மூலம், பழைய Flat Rate வட்டி முறையும் Rule of 78 முறையும் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக வெளிப்படையான Reducing Balance அதாவது 'குறைந்து வரும் நிலுவைத் தொகை'யும் Effective Interest Rate எனப்படும் 'பயனுள்ள வட்டி விகித' முறைகளும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் பயனீட்டாளர் செலுத்தும் தவணைத் தொகை ஆரம்பத்திலிருந்தே அசல் மட்டும் இன்றி வட்டியையுமே சேர்த்துக் குறைக்கும் என்றும், டிஜிட்டல் கையொப்பங்கள் போன்ற தொழில்நுட்ப மாற்றங்களுக்கு இச்சட்டம் வழிவகுக்கும் என்றும் அவர் விளக்கினார்.

Related News