Sep 28, 2026
Thisaigal NewsYouTube
நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு

Share:

கோத்தா கினபாலு, மார்ச்.15-

மலேசிய மக்களின் கடின உழைப்பைப் பாராட்டும் வகையில், இந்த ஆண்டு நோன்புப் பெருநாள் பண்டிகையை முன்னிட்டு ஒரு நாள் கூடுதல் பொது விடுமுறை வழங்கப்படும் என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். இந்த விடுமுறையானது பண்டிகை வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை விழுவதைப் பொறுத்து, முறையே மார்ச் 23 அம் தேதி திங்கட்கிழமை அல்லது பெருநாளுக்கு முந்தைய நாளான மார்ச் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வழங்கப்படும் என அவர் விளக்கமளித்தார். அதே வேளையில், பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து, குடும்பத் தேவைகளை அறிந்து விவேகத்துடன் செயல்படுமாறும் பிரதமர் அறிவுறுத்தினார்.

Related News