Sep 27, 2026
Thisaigal NewsYouTube
பாண்டாய் பலோக் பகுதியில் விளையாடிய மாணவர் மாயம் - நீரில் மூழ்கியிருக்கலாம் என அச்சம்
தற்போதைய செய்திகள்

பாண்டாய் பலோக் பகுதியில் விளையாடிய மாணவர் மாயம் - நீரில் மூழ்கியிருக்கலாம் என அச்சம்

Share:

பகாங் மாநிலம் பாண்டாய் பலோக் பகுதியில் நண்பர்களுடன் சிப்பி சேகரிக்கச் சென்ற 16 வயது மாணவர் நீரில் மூழ்கியிருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது.

மாலை 6.02 மணியளவில், இச்சம்பவம் குறித்த அவசர அழைப்பு பெறப்பட்டதாக பகாங் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவின் உதவி செயல்பாட்டு இயக்குநர் முகமது சாலாவுதீன் ஈசா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, குவாந்தான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பொதுமக்களின் உதவியுடன் கடற்கரைப் பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

என்றாலும், தற்போது வரை மாயமான மாணவர் கண்டுபிடிக்கப்படாத நிலையில், தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனிடையே, பகாங் மாநில கல்வி இலாகா வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக்குத் தெரியாமல் மாணவர்கள் சிலர் விடுதியிலிருந்து வெளியேறி கடற்கரைப் பகுதியில் விளையாடச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளது.

காணாமல் போன மாணவருக்காக பிராத்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளது.

Related News

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்