கோலாலம்பூர், ஆகஸ்ட்.17-
முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரஸாக்கின் தண்டனையைக் குறைக்கும் ஆவணத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என பகாங் மாநில முதல்வர் டத்தோ ஶ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் மீண்டும் வலியுறுத்தினார். இந்த ஆவணம் உள்ளது என்பதை நீதிமன்றம் கடந்த வாரம் உறுதிப்படுத்தியதால், மேலும் விசாரணை தேவையில்லை என்று அம்னோவின் உதவித் தலைவருமான வான் ரோஸ்டி கூறினார்.
இந்த நடவடிக்கை, கட்சி உறுப்பினர்களுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும் என அவர் தெரிவித்தார். அதே வேளையில், டத்தாரான் டேவான் பண்டாராயா கோலாலம்பூரில் அவர் கலந்து கொண்ட புரோகிராம் லாரியான் தோக் காஜா கோலாலம்பூர் எடிசி 2025 ந்தில் 3,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வெளி மாநிலங்களில் தற்போது வசித்து வரும் பகாங் மக்களின் ஒற்றுமையையும் வீரத்தையும் இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்துகிறது என அவர் கூறினார்.








