கோலாலம்பூர், டிசம்பர்.04-
அரசாங்கம் அமல்படுத்திய முற்போக்கு சம்பள முறையில் கடந்த நவம்பர் மாதம் வரை 32 ஆயிரம் தொழிலாளர்கள் பலன் பெற்றுள்ளதாக மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.
இந்த 32 ஆயிரம் தொழிலாளர்களும் 16 விழுக்காடு வரை சம்பள உயர்வைப் பெற்றுள்ளதாக ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.
முற்போக்கு சம்பள முறையை அரசாங்கம் பரீட்சார்த்த முறையில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜுன் மாதம் அமல்படுத்தியது. இந்தத் திட்டத்தில் கிட்டத்தட்ட 3 ஆயிரம் தொழிலாளர்கள் பங்குப் பெற்றுள்ளார்.
தொழிலாளர்களுக்கு கூடுதல் சம்பள உயர்வு அனுகூலத்தின் வாயிலாக மொத்தம் 34 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளதாக இன்று மக்களவையில் அமைச்சர் ஸ்டீவன் சிம், தெரிவித்தார்.
சம்பள உயர்வைப் பெற்ற அனைத்து தொழிலாளர்களும், இந்த ஊக்கத் தொகைக்கான தகுதியைப் பெறுவதற்கு நிபந்தனைகளில் ஒன்றாக அவர்கள் வருடத்திற்கு 21 மணி நேரம் பயிற்சி பெற வேண்டும் அல்லது முன் அடைவு நிலைக்கான அங்கீகாரம் மூலம் குறைந்தபட்ச பயிற்சியாவது பெற வேண்டும் என்று அமைச்சர் ஸ்டீவன் லிம் விளக்கினார்.








