மலேசிய குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் பதவியிலிருந்து அதிரடியாக பணியிடம் மாற்றப்பட்டுள்ள அதன் தலைமை இயக்குநர் Khairul Dzaimee Daud, பிரதமர் துறையின் சட்ட விவகாரங்களுக்கான பிரிவின் தலைமை இயக்குநரான நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை குடிநுழைவுத்துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பிரியாவிடை நிகழ்வில் Khairul Dzaimee இதனை தெரிவித்தார்.
இலாகாவிட்டு இலாகா மாற்றப்படுவதும், சுழல் முறையில் பதவியேற்பதும் அரசு சேவையில் வழக்கமான ஒன்றாகும் என்று Khairul Dzaimee குறிப்பிட்டார். 1996 ஆம் ஆண்டு அரசாங்க சேவையில் சேர்ந்த Khairul Dzaimee, கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநராக பதவி ஏற்றார்.








