Jun 29, 2026
Thisaigal NewsYouTube
சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்
தற்போதைய செய்திகள்

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

Share:

கோத்தா கினபாலு, மார்ச்.10-

சபா மாநிலத்தில் உள்ள Kota Marudu, Paitan மற்றும் Pitas மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், இன்று மாலை 4.20 மணி நிலவரப்படி மொத்தம் 418 பேர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை, சம்பந்தப்பட்ட மாவட்ட பேரிடர் மேலாண்மை குழுக்களால், பேரிடர் நிலையானது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தின் தகவல் தளத்தின் படி, Kota Marudu மாவட்டத்தில் 398 பேர் நிவாரண மையத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Paitan மற்றும் Pitas மாவட்டங்களில் தலா 10 பேர் பாதுகாப்பு தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சரவாக் மாநிலத்தின் கூச்சிங் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பால், 38 பேர் இன்னும் ஒரு நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு