Sep 28, 2026
Thisaigal NewsYouTube
"காணாமல் போன 6 வயது ஆட்டிசம் சிறுமி குட்டை நீரில் பிணமாக மீட்பு!"
தற்போதைய செய்திகள்

"காணாமல் போன 6 வயது ஆட்டிசம் சிறுமி குட்டை நீரில் பிணமாக மீட்பு!"

Share:

கெடா, ஜித்ராவில் உள்ள பி.பி.ஆர் தாமான் நாகசாரி குடியிருப்புப் பகுதியில் இன்று காலை காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த 6 வயது சிறுமி, துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

ஆட்டிசம் குறைபாடுள்ள மியா கதீஜா சுரைடி என்ற அந்த சிறுமி, இன்று காலை 8 மணியளவில் தனது வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். சிறுமிக்குத் தொடர்பு கொள்ளும் திறன் மற்றும் சமூகத் தூண்டுதல்களுக்குப் பதிலளிக்கும் திறன் குறைவாக இருந்ததால், அக்கம்பக்கத்தினர் மற்றும் குடும்பத்தினர் மேற்கொண்ட தேடுதல் முயற்சியில் பெரும் சவால்கள் நிலவின. சிறுமியைப் பத்திரமாக மீட்க உதவுமாறு அவரது குடும்பத்தினர் சமூக வலைதளங்கள் வாயிலாகப் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இருப்பினும், இன்று மாலை 4.26 மணியளவில் குடியிருப்புப் பகுதிக்கு அருகிலுள்ள குட்டை ஒன்றில் சிறுமி சடலமாக மிதப்பது குறித்து தீயணைப்புத் துறைக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த ஜித்ரா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தினர், சிறுமியின் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Related News

" | Thisaigal News